தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் 1234 வேலை வாய்ப்புகள்!தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 1234 கிராம சுகாதார செவிலியர், துணை செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவ பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1234பணி: Village Health Nurse / Auxiliary Nurse Midwife

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத சுகாதாரப் பணியாளர் படிப்பான MHW முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் பெற்று 2 ஆண்டு Auxiliary Nurse Midwifery in Nursing (ANM) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.