Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 13, 2019

வரலாற்றில் இன்று 13.10.2019

அக்டோபர் 13 (October 13) கிரிகோரியன் ஆண்டின் 286 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

54 – ரோமப் பேரரசன் குளோடியசு அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து அவளது மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.
1492 – கொலம்பசும் அவரது குழுவினரும் பகாமாசில் தரையிறங்கினர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டிசியில் இடப்பட்டது.
1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: புதிய இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.
1953 – இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்கா துறந்தார்.
1970 – பிஜி ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.


1972 – மொஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
1976 – பொலீவியாவைச் சேர்ந்த போயிங் சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.
1990 – சிரியப் படைகள் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது.

பிறப்புகள்

1911 – அசோக் குமார், இந்திய நடிகர் (இ. 2001)
1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் (இ. 2013)
1931 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர் (இ. 1997)
1977 – பால் பியர்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1977 – கிரேத் பத்தி, ஆக்ங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
1978 – ஜெர்மெயின் ஓனீல், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1982 – இயன் தோப், ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்



இறப்புகள்

54 – குளோடியசு, ரோமப் பேரரசன் (பி. கிமு 10)
1911 – சகோதரி நிவேதிதை, ஐரிய சமூகப் பணியாளர், எழுத்தாளர், ஆசிரியை (பி. 1867)
2015 – கே. வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)

சிறப்பு நாள்

இயற்கைப் பேரிடர் குறைப்பிற்கான அனைத்துலக நாள்
பாத்திமா அன்னை திருவிழா