இந்தியாவில் முதல் முறையாக 140 வருடங்கள் கண்ட அஞ்சல் அட்டைக்கு சிறப்பு அஞ்சல் உறை திருச்சியில் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9 முதல் 15 தேதி வரை அஞ்சல்துறை வாரமாக கொண்டாடப்படுகிறது உலக அஞ்சல் தின வாரம் திருச்சி தலைமை தபால் அலுவலகத்தில் துவங்கியது.

திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணிசங்கர் ,தேசிய கல்லூரி முதல்வர் சுந்தர்ராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மத்திய மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குனர் சாந்தலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் தாமஸ் லூர்து ராஜ் சிறப்புரையாற்றினார். இந்தியாவிலேயே முதல் முறையாக 140 ஆண்டை கண்ட அஞ்சல் அட்டை சிறப்பு அஞ்சல்உறையினை அஞ்சல்துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் வெளியிட ஹாபீஸ் அறக்கட்டளை நிறுவனர் மதன் பெற்றுக்கொண்டார்.முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ரவிந்தரன், முதுநிலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்கள். உதவி இயக்குநர் மைக்கேல் ராஜ் நன்றி உரையாற்றினார்.
அஞ்சல் அட்டை என்பது ஒரு செவ்வக துண்டு தடிமனான காகிதம் அல்லது மெல்லிய அட்டை, உறை இல்லாமல் எழுதுவதற்கும் அஞ்சல் செய்வதற்கும் நோக்கம் கொண்டது .
ஒரு கடிதத்தை விட குறைந்த கட்டணத்தில் அஞ்சலட்டை அனுப்பலாம் .
அஞ்சல் அட்டைகளின் ஆய்வு மற்றும் சேகரிப்பு டெல்டியாலஜி என்று அழைக்கப்படுகிறது .
1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் அஞ்சல் அட்டை ஆஸ்திரேலியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. உலகளவில் அஞ்சலட்டை வெளியிட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. வியன்னா ராணுவ கழகத்தைச் சேர்ந்த இமானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார்.
இந்திய தபால் துறை இயக்குனர் ஜெனரல் இருந்த மோன்டீத் என்ற அதிகாரியின் முயற்சியால் 1879ல் அஞ்சல் அட்டை இந்தியாவில் அறிமுகமாகியது.


1- 7 -1879 ஆம் ஆண்டில் இந்தியாவில் அஞ்சலட்டை அறிமுகமானது.
1879 ஆம் ஆண்டில் உள்நாடு மற்றும் வெளிநாடு அஞ்சலட்டை அறிமுகமாயிற்று. ராணியின் தலை உருவத்தை அச்சிட்ட உள்நாட்டு அஞ்சலட்டை விலை காலணா அரையணா மதிப்புள்ளதும் வெளிநாட்டு உபயோகத்திற்கு நீலநிற அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. இரண்டு வகை அஞ்சல் அட்டைகளும் லண்டனில் உள்ள தாமஸ் டீ லாரு அண்ட் கம்பெனியால்
1-07- 1879 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
1880 ஆம் ஆண்டு சர்வீஸ் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. 1883இல் பதில் அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது 24 -6 -1922அஞ்சலட்டை விலை காலணாவிலிருந்து அரை அணாவாயிற்று 15- 2 -1932 முதல் முக்கால் அணாவாயிற்று.
24 -6-1931 விமானசேவை தபால் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. சுதந்திரத்திற்கு முன்பு ராணி உருவம் பதித்த அஞ்சல் அட்டைகள், எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. சுதந்திரத்திற்கு பின் சில மாதங்கள் வரை ஆறாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சலட்டை உபயோகப்படுத்தப்பட்டன.


1955இல் பழுப்புநிற அரையணா அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. 1957இல் அசோக சக்கர முத்திரை கொண்ட அஞ்சல் அட்டைகள் வெளியாகின.
1-4-1957 அஞ்சல் அட்டைகளை 5 பைசா 1-4-1965ல் 6பைசா 15-5-1968 ல் 10 பைசா ஆனது.15-5-1978 இருந்து 1-6-1997 வருடங்கள் வரை 15 பைசாவாக புழக்கத்தில் இருந்த அஞ்சலட்டை பின்பு 25 பைசாவாக விலை உயர்ந்தது.
2-7-1979 இந்திய அஞ்சல் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரத்தியேக அஞ்சல் அட்டையை வெளியிட்டது. போட்டிகளுக்கான அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. மூணு பைசாவிற்கு அறிமுகமான அஞ்சலட்டை தற்போது ஐம்பது பைசாவிற்கு விற்கப்படுகிறது. அஞ்சலட்டை அச்சிட அரசிற்கு அதிகப்படியான செலவு ஏற்பட்டாலும் மலிவான தகவல் போக்குவரத்து சாதனம் தேவை என்பதால் மிகவும் குறைந்த விலைக்கு அஞ்சலட்டை விற்கப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறை மேக்தூத் அஞ்சல் அட்டைகளை ஆகஸ்ட் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.


அஞ்சல் அட்டையில் பெறுநர் விலாசத்தின் இடதுபுறம் விளம்பரம் இடம் பெற்றிருக்கும். முதல் மேக்தூத்
அஞ்சல் அட்டையில் ரஜினியின் பாபா தமிழ் திரைப்படம் விளம்பரம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய அஞ்சலட்டை 25 பைசாவிற்கு விற்கிறார்கள் 25 பைசா செலவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அஞ்சல் அட்டையில் தகவல்களை அனுப்பி பயன் பெறலாம்.
140 ஆண்டுகள் கண்ட அஞ்சலட்டை கண்காட்சினை யோகா ஆசிரியர் விஜயகுமார் செய்திருந்தார்.
அஞ்சல்தலை சேகரிப்பு மைய அலுவலர் ராஜேஷ் , ஜம்புநாதன், ரகுபதி, நாசர் ராஜேந்திரன், தாமோதரன், லால்குடி விஜய குமார், சர்மா கமலக்கண்ணன் மற்றும் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.