ரூ. 60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

ஓட்டுனர் 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி:

8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கூடுதல் தகுதி :ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும், கூடவே 5 வருடம் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2019 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் டிரைவிங் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணையதளத்தில் www.tnrd.gov.in வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:இயக்குநர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
4-வது தளம், பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை - 15

விண்ணப்பிக்கும் கடைசி தேதி :

25.10.2019 மாலை 5.45 மணிக்குள்