Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 11, 2019

உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு: ஐகோர்ட் உத்தரவு


சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு, எழுத்து தேர்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த சுப்ரமணியன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தாக்கல் செய்த மனு: அரசு கல்லுாரிகளில், 2, 300 உதவி பேராசிரியர் காலியிடங்களுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. &'ஆன்லைனில்&' விண்ணப்பிக்க, வரும், ௩௦ம் தேதி கடைசி நாள் என, குறிப்பிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.கல்வி தகுதிக்கு, 9; அனுபவத்துக்கு, 25; நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வு அடிப்படையில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இத்தகைய நடைமுறையை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்துள்ளது.போட்டி தேர்வு வழியாக தான், ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுப்பது எல்லாம், போட்டி தேர்வு வழியாக தான் இருக்கும். உதவி பேராசிரியர் பணிக்கு, எழுத்து தேர்வு இல்லாமல் இருப்பது சரியல்ல.நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தேர்வு செய்ய முடியாது.மற்ற மாநிலங்களில் எல்லாம், போட்டி தேர்வு அடிப்படையில் தான் தேர்வு நடக்கிறது. எனவே, தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்.

தேர்வில் தகுதியை உறுதி செய்ய, எழுத்து தேர்வு நடத்தி, தேர்வு செய்யும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆர்.சுப்ர மணியன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார்.&' நீதிமன்றத்தில், தோட்டப் பணியாளருக்கு கூட, எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது&' என்ற நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, வரும், ௧௫க்கு விசாரணையைதள்ளிவைத்தார்.