ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு


ஏர் இந்தியாபொறியியல் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலியாக உள்ள இந்த 170 மேற்பார்வையாளர் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Assistant Supervisor : 170 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் விமான பராமரிப்பு அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.08.2019 அன்று 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.சம்பளம் :

ரூ. 19,570 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை :

தகுதியானவர்களை தேர்வு செய்ய ஆன்லைன் திறன் சோதனை தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் :
பொது, ஓபிசி பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 1000 செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.airindia.in அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.airindia.in/writereaddata/Portal/career/840_1_Notification-18102019-CORRIGENDUM.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 05.11.2019