இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு


உச்ச நீதிமன்றத்தில் 58 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த 58 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Senior Personal Assistant - 35 காலிப்பணியிடங்கள்
Personal Assistant - 23 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

எதாவது ஒரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி:

சுருக்கெழுத்து மற்றும் கணினியில் நிமிடத்துக்கு 100 / 110 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகள்படி வயது வரம்பில் சலுகைகளும் உண்டுசம்பளம் :

Senior Personal Assistant - ரூ. 47,600
Personal Assistant - ரூ. 44,900
சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

General / OBC வகுப்பை சார்ந்தவர்கள் ரூ. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 150/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://jobapply.in/supremecourt2019paspa/DefaultNext.aspx விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.10.2019