தீபாவளி விடுமுறை: மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்ட அறிவிப்பு:
தீபாவளிக்கு மறுநாள் (அக். 28) பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மருத்துவம் சார் அறிவியல் படிப்பு (Allied Health Science) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறவிருந்தன.
இந்த நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ஆம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.