அரசு உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண். 12/2019, நாள் 28.08.2019 மற்றும் 04.10.2019 அன்று வெளியிடப்பட்டது. மேற்காணும் பணியிடங்களுக்கன இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 30.10.219 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து காலநீட்டிப்பு செய்ய வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தத்தால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கன உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தற்போது விண்ணப்பங்களை 15.11.2019 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

உதவி பேராசிரியர் : 2331 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

PG Degree / Ph.Dவயது வரம்பு:

57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 57,700 முதல் 1,82,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :

SC/ST/PWD பிரிவை சார்ந்தவர்களுக்கு 300 ரூபாய் செலுத்த வேண்டும்.
மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 600 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://trb.tn.nic.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம். கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை http://trb.tn.nic.in/arts_2019/Lastdate.pdf பார்த்து தெரிந்து கொள்ளவும்.விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 15.11.2019 மாலை 5.00 மணி வரை