மத்திய அரசில் வேலை... விண்ணப்பிக்க ரெடியா..?


SSC என்னும் ஸ்டாஃப் செலெக்‌ஷன் கமிஷன் நடத்தும் மத்திய அரசில் 34 விதமான பணிகளுக்காக தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனின் அப்ளிகேஷன் சமர்ப்பிக்க நவம்பர் 25-ம் தேதி மாலை 5 மணி வரையில் காலக்கெடு உள்ளது. CGL 2019 Tier 1 தேர்வு ஆன்லைனில் 2020, மார்ச் 2 முதல் மார்ச் 11 வரையில் நடைபெறும், Tier 2 மற்றும் Tier III தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 25-ம் தேதி வரையில் நடைபெறும்.இன்னும் பல க்ருப் C மற்றும் D பதவிகளுக்கான ஆட்கள் தேர்வும் நடைபெற உள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பம் கட்டணம் 100 ரூபாய். இன்னும் பிற கல்வித் தகுதி, வயது தகுதி உள்ளிட்ட விவரங்கள் www.sscsr.gov.in / ssc.nic.in இணையதளப் பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.