எல்லை சாலை கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் (பிஆர்ஓ) காலியாக உள்ள 778 'மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்)' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Driver Mechanical Transport (Ordinary Grade) - 388
பணி: Electrician - 101
பணி: VEHICLE MECHANIC - 92
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Skilled Worker (Cook) -197
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.18,900 - 39,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு, மருத்துவத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பபட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகளை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bro.gov.in/WriteReadData/linkimages/9558409500-Untitled.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019