10,11,12 ஆம் வகுப்பு - பொது தேர்வு நேரம் நீட்டிப்புக்கு அரசாணை வெளியீடு.

பொது தேர்வு நேரம் நீட்டிப்புக்கான, அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு, இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், புதிய பாட திட்டம் காரணமாக, பொது தேர்வு எழுதும் நேரத்தை, மூன்று மணி நேரமாக மாற்றி, அரசுதேர்வு துறை, அக்., 22ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை அங்கீகரித்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.