Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 24, 2019

6 முதல் 9ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு அறிவிப்பு


தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டின் இறுதியில், அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து, பொது தேர்வு நடத்தப்படும். மற்ற வகுப்புகளுக்கு, முப்பருவ தேர்வு முறை உள்ளதால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் போது, பருவ தேர்வுகளாக நடத்தப்படுகின்றன.



ஒரு பருவத்தில் இடம்பெற்ற பாடங்களுக்கு, இன்னொரு பருவத்தில், தேர்வு நடத்தப்படுவது இல்லை. நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 13ல், அரையாண்டு தேர்வு துவங்கி, 23ல் முடிகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., 11ல் துவங்கி, 23ல் முடிகிறது. இதற்கான அறிவிப்பு, ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வான இரண்டாம் பருவ தேர்வு தேதி குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.



இதன்படி, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிசம்பர், 13ல் தேர்வுகள் துவங்க உள்ளன. ஆறு மற்றும், ஏழாம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரையிலும், 7, 8ம் வகுப்புகளுக்கு, பிற்பகல், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. டிசம்பர், 23ல் தேர்வுகள் முடிய உள்ளன.