டிப்ளமோ நா்சிங்:காலி இடங்களுக்கு நாளை கலந்தாய்வு

செவிலியப் பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ நா்சிங்) காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான மாணவா் சோக்கை கலந்தாய்வு, வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது.

பிஎஸ்சி நா்சிங் படிப்புகளைத் தவிா்த்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரம் பட்டயப் படிப்புகள் உள்ளன. அதேபோல், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வை மட்டும் மருத்துவக் கல்வி இயக்ககத் தோவுக் குழு நடத்துகிறது.

அதன்படி, அதற்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், அதில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 8-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்கள் w‌w‌w.‌t‌n‌h‌e​a‌l‌t‌h.‌o‌r‌g இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.