Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?


தமிழக மருத்துவத் துறைக்கு, லேப் டெக்னீசியன் கிரேடு-III என்ற பணிக்கு 1,508 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
லேப் டெக்னீசியன் - Laboratory Technician Grade-III








காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 1,508 காலிப்பணியிடங்கள்

ஊதியம்:
மாதம் ரூ.8,000 சம்பளமாக வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பாணை வெளியான தேதி: 19.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 09.12.2019
வங்கிகள் மூலம்தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.12.2019





தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwBD / விதவைகள் - ரூ.300

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)



கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். அத்துடன் ஒரு வருட மெடிக்கல் லேப்டெக்னாலஜி என்ற சான்றிதழ் படிப்பை முடித்திருத்தல் வேண்டும்.

குறிப்பு:
நல்ல உடற்திறன், நல்ல கண்பார்வை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று பணிபுரிவதற்கான உடற்தகுதி பெற்றிருத்தல் அவசியம்.




ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று 'ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேசனை'
கிளிக் செய்து, பின் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.


மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://www.mrb.tn.gov.in/pdf/2019/LT_Gr_III_2019_Notification_19112019.pdf - என்றஇணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.