Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 21, 2019

சென்னை பள்ளிக்கூடங்களில் காற்று மாசு எந்த அளவில் உள்ளது? - சிறுவன் ஆய்வு


சென்னையிலும் காற்று மாசு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 15 வயது சிறுவன் பள்ளிக்கூடங்களில் கருவி கொண்டு காற்று மாசு இருப்பதை ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.



சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ (வயது 15) என்ற சிறுவன் தான் இந்த முயற்சியை செய்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக அவர் சென்னையில் அசோக் நகர், திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், பெசன்ட்நகர், வடபழனி, தண்டையார்ப்பேட்டை, திருவான்மியூர், ராயபுரம், தியாகராயநகர் உள்பட 14 இடங்களில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார். இந்த அறிக்கையின்படி, அதுல் மேத்தியூ காற்று மாசு அளவிடும் கருவியை கொண்டு (ஏரோசோல் மானிட்டர்)



14 பள்ளிக்கூடங்களில் எடுத்த ஆய்வை ஒப்பிட்டு பார்க்கும்போது, ஒரு பள்ளியில் கூட காற்று மாசு இல்லை என்று சொல்ல முடியாத அளவில் நிலைமை உள்ளது. அதிலும், அதிகபட்சமாக மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், அங்கு கடுமையான மாசு இருப்பதாகவும், 8 பள்ளிக்கூடங்களில் மிகவும் மோசமான மாசு இருப்பதாகவும், மீதமுள்ள 5 பள்ளிக்கூடங்களில் மோசமான மாசு உள்ளதாகவும் அந்த சிறுவன் தெரிவிக்கிறார்.