Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 5, 2019

ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.


ஆசிரியர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.




அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், மே மாதம் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். குறைந்தபட்சம் ஓராண்டாவது, ஒரு பள்ளியில் பணி முடித்தவர்கள் மட்டுமே, இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கமுடியும் என்ற விதி பின்பற்றப்பட்டது. இந்த ஆண்டு அந்த விதி மாற்றப்பட்டு, ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, ஆசிரியர்கள் சிலர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கின் முடிவில், வழக்கு தொடர்ந்தவர்கள் மட்டும், ஓராண்டுக்கு அதிகமாக ஒரு பள்ளியில் பணியாற்றியிருந்தால், கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.




இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணைப்படி, வழக்கு தொடராத ஆசிரியர்கள், ஒரு பள்ளியில் தொடர்ந்து, மூன்று ஆண்டுகள்பணி முடித்திருந்தால் மட்டுமே, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, கூறப்பட்டு உள்ளது.எனவே, மூன்றாண்டு பணி முடித்த ஆசிரியர்களின் விபரங்களை மட்டும், எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் சேகரிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு உரிய விபரங்களுடன் தயாராக இருங்கள்; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.