கவுரவ விரிவுரையாளர் பணிக்கு நாளை தேர்வு

புதுச்சேரி: கவுரவ விரிவுரையாளர் பணிக்கான எழுத்துதேர்வு நாளை 24ம் தேதி பாரதிதாசன் கல்லுாரியில் நடக்கிறது.பள்ளி கல்வித்துறை நிர்வாக பிரிவு துணை இயக்குநர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு தகுதி அடிப்படையில் நிரப்புவதற்கான போட்டித்தேர்வு, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கத்தால், நாளை 24ம் தேதி, காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நடக்கிறது.தேர்வு கூட அனுமதிச்சீட்டுகள், தேர்வு எழுத தகுதி வாய்ந்த 685 தேர்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9:00 மணிக்கு, பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதி சீட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பால்பாயிண்ட் பேனாவுடன் மட்டுமே வர வேண்டும். மொபைல்போன், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் தேர்வு கூடத்திற்கு கொண்டுவர அனுமதியில்லை.தேர்விற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேர்வர்களுக்கான தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.