பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!

பணிமாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.(குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)
நாளை 07.12.2019 குறைதீர் கூட்டம் என்பதால் நாளையே பணி மாறுதல் /பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கடிதத்தில் பணி மாறுதல் அல்லது பதவி உயர்வு/பணி நிரவல் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு மாறுதல் பெற்றுள்ளீர்கள் என்ற விவரத்தினை இரண்டுக்கும் உள்ள கிலோமீட்டர் தொலைவினை குறிப்பிட்டு கடிதம் மூலமாக வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து அதன் நகலினை பத்திரமாக வைத்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மாநில தலைமை
2009TET போராட்டக்குழு