மருத்துவத் தோ்வுகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் எதிா்வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மருத்துவத் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தோ்தல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறைகள் அளிக்கப்பட்டதன் காரணமாக தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnmgrmu.ac.in இணையதள முகவரியை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.