Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 9, 2019

காவலன் செயலி* பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Download):


1. Google Play Store-ல் தேடுதல் பட்டையில் (Search
Bar) “Kavalan SOS” என்று டைப் செய்ய வேண்டும்.
2. Kavalan SOS என்ற செயலியை Install என்ற
பட்டனை அழுத்த வேண்டும்.
3. தற்போது 7 அனுமதி கோரிக்கை ஒன்றன் பின்
ஒன்றாக கேட்கப்படும். அவை அனைத்திற்கும்
Allow என்று அனுமதி கொடுக்க வேண்டும்.
4. தற்போது தாங்கள் வைத்திருக்கும் ஆன்டிராய்டு
கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டது.




செயலியை செயல்படுத்தும் வழிமுறைகள்; (Installation):

I) Registration Module:

1. இந்த பகுதியில் தங்களது மொபைல் எண்¸ பெயர்¸
மற்றொரு மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு
செய்ய வேண்டும்.
2. இந்த நிலையில் தங்களது கைப்பேசியல் GPS
வசதியை ON செய்ய அனுமதி கேட்கப்படும். GPS
ON-ல் இருந்தால் மட்டுமே செயலி துள்ளியமாக
செயல்பட முடியும்.
3. இந்த செயல்முறை முடிந்த பின்பு Next கொடுக்க
வேண்டும்.




II) Profile Module:

1. Kavalan Welcomes (தங்களது மொபைல் எண்) என்ற
பக்கம் திரையில் தோன்றும்.
2. தங்களது புகைப்படம் தேவையென்றால்
மொபைல் கேமரா மூலமாகவோ அல்லது கேலரி
மூலமாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்.
3. Email-ID என்ற பகுதியில் தங்களது இ-மெயிலை
கொடுக்க வேண்டும்.
4. Date of Birth என்ற பகுதியில் தங்களது பிறந்த
தேதியை கொடுக்க வேண்டும்.
5. Male/Female என்ற பகுதியில் உரியதை தேர்வு
செய்ய வேண்டும்.
6. Full Address என்ற பகுதியில் தங்களது முழு
முகவரியை கொடுக்க வேண்டும் அல்லது அந்த
பட்டையில் (Bar) வலது பக்கத்தில் தோன்றும்
Location படத்தை கிளிக் செய்ய Google Map
உதவியுடன் தங்களது முகவரியை தேர்வு
செய்யலாம்.
7. City என்ற பகுதியில் தங்களது நகரத்தினை பதிவு
செய்ய வேண்டும்.
8. Work Address என்ற பகுதியில் தங்களது பணிபுரியும்
அலுவலக முகவரியை தேவையென்றால் பதிவு
செய்ய வேண்டும்.
9. இவை அனைத்தும் முடிந்த பின்பு Sign UP
கொடுக்க வேண்டும்.




III) Activation Module:

1. இந்த பகுதியில் தோன்றும் பட்டையில்
தங்களுக்கு குறுஞ்செய்தி மூலம்
அனுப்பப்பட்டுள்ள 6 இலக்க (Activation Code) ரகசிய
எண்னை உள்ளீடு செய்த வேண்டும்.பின்பு Next
கொடுக்க வேண்டும்.

IV) Emergency Contact Module

1. இந்த பகுதியில் குறைந்தபட்சம் 2¸ அதிகபட்சம் 3
நம்பகமான நபர்களின் மொபைல் எண்களை பதிவு
செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
2. இதில் மொபைல் எண்¸ பெயர்¸ உறவுமுறை
ஆகியனவற்றை கொடுக்க வேண்டும்.
3. Next பட்டனை அழுத்த வேண்டும்.




தற்போது செயலியானது முழுமையாக பதிவிறக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது தங்களது மொபைல் திரையில் “Kavalan SOS” செயலியின் முகப்பு திரையானது தோன்றும். அதில் உள்ள SOS என்ற பட்டனை 5 விநாடிகள் அழுத்தி பிடிக்க தங்களது அபாய அழைப்பானது சென்னையில் உள்ள “Master Police Control Room” சென்று தங்கள் அருகாமையில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது காவல் அதிகாரிக்கோ அழைப்பு அனுப்பப்படுகிறது. அதன்மூலம் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.