வாக்குப்பெட்டியினை தேர்தலின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் எவ்வாறு கையால்வது? How to Handle Ballot box?


வாக்குப்பெட்டிகள் இயக்குவதற்கான அறிவுரைகள் :
படம் 1 வாக்குப்பெட்டி வாக்கு இடப்படுவதற்குரிய நிலையில் இருப்பதைக் காட்டுகிறது . பெட்டியின் பல்வேறு பகுதிகளை அறிந்து கொள்ளும் பொருட்டு இப்படத்தைக் கூர்ந்து நோக்கவும் . இந்நிலையில் வாக்குச்சீட்டுகளை நுழைப்பதற்கான நுழைவாய் திறந்து இருப்பதைக் கவனிக்கவும் .

பெட்டியைத் திறப்பதற்கு :

1 . சன்னல் மூடியைப் பொத்தானுடன் பிணைத்துக் கட்டியுள்ள கம்பியைக் கழற்றிவிட வேண்டும் .

2 . படம் 2 இல் உள்ளவாறு சன்னல் முற்றிலும் திறந்து இருக்கும் பொருட்டு சன்னல் மூடியை வலப்புறமாக திருப்ப வேண்டும் .

3 . உங்கள் கையைத் திறந்தவாறு வைத்துக் கொண்டு சன்னலின் வழியே ஒரு விரலை உள்ளே நுழைத்து மூடியின் அடியில் நடுப்பகுதி வரை நீட்டி , பிறையத்தைத் தொட வேண்டும் . ( இப்பிறையத்தைப் படம் 4 இல் காணலாம் ) .

4 . பிறயத்தைச் சன்னலை நோக்கி இழுத்து படம் 3 இல் உள்ளவாறு பொத்தானை அது கால் பகுதிக்கும் குறைவாகத் திரும்பியபின் நின்று விடும்வரை இடது புறமாக மெதுவாக திருப்ப வேண்டும் . இப்போது பெட்டியின் பூட்டு திறந்துக் கொள்வதால் அதன் உட்பகுதி தெரியுமாறு மூடியைத் திறக்கலாம் ( படம் 4 ஐக் காண்க ) .

5 . பெட்டியின் இயக்க நிலையைக் குலைத்து விடாமல் அதனை பார்வையிடுவதற்கு வேட்பாளர்களை அல்லது அவர் தம் முகவர்களை அனுமதிக்க வேண்டும் .
6 . பின்னர் முகவரிச்சீட்டு ( Address tag ) ஒன்றினை பூர்த்தி செய்து பெட்டியினுள் வையுங்கள் , மற்றும் விவரச்சீட்டு ( Lable ) பூர்த்தி செய்து உட்புறம் ஒட்டி வையுங்கள் .

மேலும் முழுமையான தகவலுக்கு ...
How to handle ballot box? Instructions - Download here