Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 10, 2020

தமிழ்நாடு மின்சார துறையில் 2,400 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி, கட்டண விவரங்கள் உள்ளே!


தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு பணிகளுக்காக தற்போது 2400 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியியலாளர் ( எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் ) என 5 விதமான பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.




தமிழ்நாடு மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் TANGEDCO வானது தற்போது மின்சார துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் ( எலெக்ட்ரிக்கல் ), உதவி பொறியாளர் ( மெக்கானிக்கல் ), உதவி பொறியாளர் (சிவில்) ஆகிய பணிகளுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது.

இளநிலை உதவியாளர் :

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி - 10/01/2020 - 10/02/2020.




கணக்கீட்டாளர் :

கல்வி தகுதி : பி.காம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி - 10/02/2020 - 09/03/2020.

உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் ) :

கல்வி தகுதி : CIVIL, EEE, MECHANICAL, ECE, IT உள்ளிட்ட பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி - 24/01/2020 - 24/02/2020.

வயது வரம்பு :

பொதுப்பிரிவினர் - 18 வயது முதல் 30 ; பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது முதல் 32 ; SC/ST / மாற்று திறனாளிகள் / விதவைகள் - 18 வயது முதல் 35 வரை ;

கட்டண விவரம் :




SC/ST / மாற்று திறனாளிகள் / விதவைகள் - 500 ரூபாய் கட்டணம் ; மற்றவர்களுக்கு - 1000 ருபாய் கட்டணம்.

மேலும் விவரங்களுக்கு… https://www.tangedco.gov.in/