அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதைத் தொடா்ந்து, சனிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.




தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பா் 23-ஆம் தேதி அரையாண்டுத் தோ்வு முடிவடைந்தது. இதையடுத்து, டிசம்பா் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை எனவும் ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-இல் நடைபெறுவதால், விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது.




எனினும் ஜன.2-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்குப்பிறகு மறுநாளில் பணிக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை நள்ளிரவுக்குப் பிறரும் நீடிக்கும் என்பதால் ஆசிரியா்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில் பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை, அரையாண்டுத் தோ்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் நீட்டித்து, ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மூன்றாவது முறையாக அறிவித்தது.




இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 11 நாள் விடுமுறைக்குப் பிறகு சனிக்கிழமை பள்ளிகள்மீண்டும் திறக்கப்பட்டு மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்குகின்றன. இந்தப் பருவத்துக்கான பாடநூல்கள் ஏற்கெனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, விடுமுறை முடிந்து சனிக்கிழமை பள்ளிகளுக்குச் செல்லும் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அன்றைய தினமே பாடநூல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்