4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் இன்று ஆலோசனை

வேலூரில் இன்று 4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆலோசனை மேற்கொள்கிறார்.வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை மாவட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு தொடக்கக்கல்வி இயக்குனர் முத்துபழனிச்சாமி கலந்து கொள்ள உள்ளார்.இக்கூட்டத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, வட்டார கல்வி அலுவலர் பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வு விவரம், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் கட்டிடம் உள்ளிட்டவை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.