Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 26, 2020

மத்திய அரசில் வன அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு


மத்திய அரசில் காலியாக உள்ள 90 வன அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான அறிவியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: Indian Forest Service Examination




காலியிடங்கள்: 90

தகுதி: வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், வேதியியல் பொறியியல், வனவியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2020 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சென்னை, திருச்சி




விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Notification-IFoSE_2020_N_Engl.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.05.2020




முதன்மைத் தேர்வு 2020 நவம்பர் மாதம் நடைபெறும். இதுகுறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2020