காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடியுங்கள்!


நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் தேநீரையே நாடுகிறோம். ஆனால் இது நம் உடலுக்கு நல்லது அல்ல. எழுந்தவுடன் அரைமணி நேரத்திற்குள் சுத்தமான தண்ணீரை முக்கால் லிட்டர் குடிக்க வேண்டும்.வெந்நீர் வேண்டாம், ஆற வைத்து வேண்டுமானால் குடிக்கலாம். சாதாரண தண்ணீர் மட்டுமே அசிடிட்டியை குறைக்கும் ஆற்றல் அதிகம் கொண்டது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அமிலத்தின் வீரியத்தை சரிசெய்து, வயிற்றை பாதுகாக்கிறது. தினமும் எழுந்ததும் தண்ணீர் குடித்தால் இரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல், சக்கரை நோய், அல்சர், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு, உடல் பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.