Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 22, 2020

காலையில் மறந்தும் சாப்பிடகூடாத உணவு..

எல்லோருக்கும் ஒரு பழக்கம் உண்டு. எழுந்த உடன் காபி இல்லையென்றால் டீ குடித்துவிட வேண்டும். இல்லையென்றால் எனக்கு நாளே ஓடாது என்று சொல்வார்கள். இன்னும் சிலருக்கு படுக்கையை விட்டு எழும்போதே காபி கப் கையிலிருக்க வேண்டும்.
தினமும் காலையில் பல் துலக்கியதும் காபியோ டீயோ கண்டிப்பாக குடிக்க கூடாது இரவு முழுவதும் வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். இதனால்; இரைப்பையில் அலர்ஜி உண்டாகும். செரிமானப் பிரச்சனையும் உண்டாகும். அப்படியானால் காபி குடிக்க கூடாதா என்கிறீர்களா?
காபியும் நல்லது தான். ஆனால் முதலில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு காபியோ அல்லது டீயோ குடிப்பது நல்லது.




2. வாழைப்பழம்
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. இதில் இருக்கும் மெக்னீஷியம் சத்து இரத்தத்தில் அதிகமாக சேரும் போது இதயத்துக்கு பாதிப்பை உண்டாக்கும். அதனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்றூ நினைத்துவிடாதீர்கள். காலை உணவுக்கு பிறகு அரைமணி நேரம் கழித்து வாழைப்பழம் சாப்பிடலாம்.




3. கடினமான உணவு
காலையில் உண்ணும் உணவுதான் நாள் முழுவது சக்தியோடு நம்மை இயங்க செய்யும். அதனால் மென்மையான உணவுகளை எடுத்துகொள்ளுங்கள். காலை வேளையில் பிரட், பர்கர், பன் உணவுகள் கண்டிப்பாக வேண்டாம். இதிலிருக்கும் ஈஸ்ட் இரைப்பையில் எரிச்சலை உண்டாக்கி நெஞ்செரிச்சல், வாய்வுத்தொல்லையை உண்டாக்கிவிடும்.




4. பானங்கள்
காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறுகள் சாப்பிடுவது பலருக்கும் வழக்கம். ஆனால் இரவு முழுவதும் இரைப்பையில் சுரந்திருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் செரிமானம் மந்தமாகும். இதிலிருக்கும் சத்துகளும் உடலில் போய் சேராது.

5.இனிப்பு நிறைந்த உணவு
காலை வேளை உணவில் இனிப்பை தவிர்ப்பதே நல்லது இனிப்புகள் உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். அதனால் இனிப்பு உணவை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சர்க்கரை கலந்த இனிப்புகளை. அப்படி தவிர்க்க முடியாத பட்சத்தில் தேன் கலந்த இனிப்பை எடுத்துகொள்ளலாம். இதனால் உடல் நாள் முழுக்க சோர்வின்றீ உற்சாகமாக இருக்கும்.





நாள் முழுக்க ஆற்றலாக இருக்க வேண்டுமெனில் உணவு முறையிலும் சில மாற்றங்களை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள் ஊட்டசத்து நிபுணர்கள். சரி அப்படியானால் உடலுக்கு வேண்டிய சத்துகள் என்ன தேவை என்கிறீர்களா> அடுத்து பார்க்கலாம்.