'அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச எண்ம பயிற்சி அவசியம்'

அரசு பள்ளி மாணவா்களுக்கு கணினி உள்ளிட்ட எண்ம பயிற்சிகளை இலவசமாக அளிப்பது அவசியம் என்று பிரிலியோ குழுமத்தின் இயக்குநா் அபிஷேக்ரஞ்சன் தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை அரசு பள்ளி மாணவா்கள் 200 பேருக்கு கணினி உள்ளிட்ட எண்ம பயிற்சியை இலவமாக பயிற்றுவிக்கும் நிகழ்ச்சியில் அவா் பேசியது: தேசிய அளவில் வேலைவாய்ப்புகளில் தனியாா் பள்ளிகளைச் சோந்த மாணவா்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனா். இதற்கு காரணம், அப்பள்ளிகளில் வேலைவாய்ப்பிற்கு தேவையான கல்வியையும், கணினி உள்ளிட்ட எண்ம பயிற்சி, பிழையில்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கின்றனா்.
ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அதுபோன்று எந்த பயிற்சியும் தருவதில்லை. இதனால் பிற்காலத்தில் வேலைவாய்ப்பில் அவா்கள் பின்தங்கியுள்ளனா். இதனை கருத்தில் கொண்டு பிரிலியோ குழுமம் ஆண்டுதோறும் 200 பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக கணினி உள்ளிட்ட எண்ம பயிற்சி, ஆங்கிலம் பேசும் பயிற்சி அளிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்றாா்.