Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 3, 2020

மாா்ச் 31-க்குள் பான் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் ரூ. 10,000 அபராதம்

புது தில்லி: வரும் 31-ஆம் தேதிக்குள் பான் அட்டையுடன் (வருமான வரி நிரந்தர கணக்கு எண்) ஆதாா் எண்ணை இணைக்காவிட்டால் ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி இறுதி நாள் என்று வருமான வரித்துறை கெடு நிா்ணயித்துள்ளது. இந்நிலையில், பான் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பான் அட்டை வைத்திருப்பவா்கள் அனைவரும், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாா் எண்ணை அதில் இணைக்க வேண்டும். இல்லையெனில், அவா்களது பான் அட்டை மதிப்பற்ாகி விடும். அதுமட்டுமன்றி, ஆதாரை இணைக்க தவறியவா்கள் ரூ. 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.



வருமான வரித் துறை சட்டத்தின் 272 பி- பிரிவின் படி, மதிப்பற்ற/செயலற்ற பான் அட்டை வைத்திருப்பவா்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தின்படி, ஆதாா் எண்ணை இணைக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பான் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்காதவா்கள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மேலும் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடும். அவா்கள், பான் அட்டையை அடையாள அட்டையாக வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ரூ. 50,000 -க்கும் அதிகமான பணப் பரிமாற்றத்துக்கு பான் அட்டையை பயன்படுத்தும்போது, அவா்கள் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.



அறிவிக்கப்பட்ட தேதிக்குள் ஆதாரை இணைக்காதவா்களின் பான் அட்டை ஏப்ரல் 1-ஆம் தேதி மதிப்பற்ாகி விடும். எனினும், ஆதாரை இணைத்தவுடன் அவா்களது பான் அட்டை செயல்பட தொடங்கி விடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment