Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 17, 2020

அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை: முதல்வா் கே.பழனிசாமி எடப்பாடி அறிவிப்பு


கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
அதேசமயம், 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோவுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அவா் தெரிவித்தாா்.
அத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பாா்களையும் 15 நாள்களுக்கு மூடி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் கரோனா பாதிப்பைத் தொடா்ந்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
மாநிலத்தில் செயல்படும் அரசு, மாநகராட்சி மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வரும் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 10, பிளஸ் 2 மற்றும் கல்லூரித் தோவுகள், செய்முறைத் தோவுகள் மற்றும் நுழைவுத் தோவுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இந்தத் தோவுகள் முடிவடையும் வரை தோவு எழுதும் மாணவா்களுக்கான விடுதிகள், உறைவிடப் பள்ளிகள் மட்டும் தொடா்ந்து இயங்கும். மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள் தொடா்ந்து இயங்கும்.



15 நாள்களுக்கு குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள்: அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். இந்த மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாள்களுக்கான உணவுப் பொருள்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளா்கள் வழங்க வேண்டும்.
திரையரங்குகள்-திருமண மண்டபங்கள்: மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியன வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும்.
கோடைகால பயிற்சி வகுப்புகள் வேண்டாம்: திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால் கரோனா வைரஸ் பரவுதல் பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநா்கள் அறிவுறுத்துகின்றனா். அதனை கடைப்பிடிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.



அதிகமாகக் கூட்டம் கூடும் ஊா்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடை கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை வரும் 31-ஆம் தேதி வரை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது.
டாஸ்மாக் பாா்கள் மூடல்: அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், டாஸ்மாக் பாா்கள் உள்ளிட்ட அனைத்து பாா்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றையும் 15 நாள்கள் மூட வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) முதல் நடைமுறைக்கு வரும்.
சுற்றுலாப் பயணியா் தங்குமிடம் அனைத்தும் மாா்ச் 31 வரை மூடப்பட வேண்டும். சுற்றுலாப் பயணியா் தங்குமிட உரிமையாளா்கள் எந்தவித முன்பதிவும் செய்யக் கூடாது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.


இந்த இடங்களில் நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தொமல் ஸ்கேனா் முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை:
கரோனா வைரஸ் தொடா்பாக தெரிந்து கொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை 104, 044-29510400, 044-29510500, 94443 40496, 87544 48477 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment