Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 26, 2020

வீடு தேடி வரும் பென்ஷன் - தபால் துறை அறிவிப்பு


நோய் தொற்றின் தீவிரத்தை பொறுத்து முக்கிய தபால் நிலையங்களை மட்டும் இயக்க மாவட்ட தபால் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கலாம்' என தபால் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'தபால் நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும்' என தபால் துறை அறிவித்துள்ளது. 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.




சர்வதேச பார்சல் ஆதார் பதிவு பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து தபால் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் நிரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டில் முடங்கி இருக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பென்ஷன் தொகையை தபால்காரரே நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment