Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 22, 2020

ISRO 2020: இஸ்ரோவீல் வேலை வாய்ப்புகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?


இஸ்ரோ நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில் காலியாக உள்ள ஆராய்ச்சி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர்
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : அகமதாபாத்
பணியிட விபரங்கள்:
குரூப் 'ஏ'




குரூப் 'ஏ' பிரிவானது ஆராய்ச்சியாளர், பொறியாளர் பணிகளுக்கு உட்பட்டதாகும். இதில் மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

குரூப் 'பி'

குரூப் 'பி' பிரிவில் எலெக்ட்ரானிக்ஸ்- 2, மெக்கானிக்கல் - 1, சிவில் - 1, எலெக்ட்ரிக்கல் - 1 என மொத்தம் 5 தொழில்நுட்ப உதவியாளர் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

குரூப் 'சி'




குரூப் 'சி' டெக்னீசியன் பிரிவில் ஃபிட்டர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரானிக்ஸ், ஐடி, பிளம்பர், கார்பெண்டர், எலெக்ட்ரிசீயன், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 19 பணிகள், 7 backlog அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ துறையில் தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட இஸ்ரோவிற்கு உட்பட்ட இப்பணியிடங்களுக்கு சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sac.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக்கட்ணடம், தேர்வுக்கட்டணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும்.

No comments:

Post a Comment