Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 2, 2020

10 TAMIL ONLINE TEST - ‘முல்லைப்பாட்டு’



1 பத்துப்பாட்டில் குறைந்த அடிகளையுடைய நூல்
A. குறிஞ்சிப்பாட்டு
B. முல்லைப்பாட்டு
C. பட்டினப்பாலை
D. மலைபடுகடாம்
See Answer:

2 முல்லைப்பாட்டின் ஆசிரியர்.
A. இளநாகனார்
B. அம்மூவனார்
C. நப்பூதனார்
D. கபிலர்
See Answer:

3 முல்லைப்பாட்டின் அடி அளவு
A. 401
B. 400
C. 150
D. 103
See Answer:

4 முல்லைப்பாட்டு எப்பாவால் ஆனது?
A. வெண்பா
B. ஆசிரியப்பா
C. கலிப்பா
D. வஞ்சிப்பா
See Answer:

5 நப்பூதனாரின் தந்தை யார்?
A. மதுரைக் கணக்காயனார் மகன்
B. கூல வணிகன்
C. மாசாத்து வாணிகன்
D. காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகன்
See Answer:

6 நேமி என்பதன் பொருள்
A. சக்கரம்
B. வடிவம்
C. கடல்
D. மலை
See Answer:

7 ‘வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’ யாருடையது?
A. சிவன்
B. திருமால்
C. நான்முகன்
D. வீரபத்ரன்
See Answer:

8 ‘நிமிர்ந்த மாஅல் போல’ என்னும் அடி திருமாலின் எந்த அவதாரத்தைக் குறிப்பிடுகிறது.
A. கூர்ம அவதாரம்
B. வாமன அவதாரம்
C. இராம அவதாரம்
D. பலராம அவதாரம்
See Answer:

9 ‘எழிலி’ என்பதன் பொருள்
A. அழகு
B. உயரம்
C. மேகம்
D. கடல்
See Answer:

10 முல்லை நிலத்தின் சிறுபொழுது
A. காலை
B. மாலை
C. நண்பகல்
D. யாமம்
See Answer:

11 முல்லை நிலத்தின் பெரும்பொழுது
A. குளிர்காலம்
B. பனிக்காலம்
C. கார்காலம்
D. வேனிற்காலம்
See Answer:

12 முல்லை நிலத்து உரிப்பொருள்
A. புணர்தல்
B. பிரிதல்
C. இரங்கல்
D. இருத்தல்
See Answer:

13 பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
A. முல்லை
B. பாலை
C. பிடவம்
D. தோன்றி
See Answer:

14 ‘நனந்தலை உலகம்’ என்னும் பாடலில் குறிப்பிடப்படும் மன்னன்.
A. சிபி மன்னன்
B. மனுநீதி மன்னன்
C. பேகன்
D. மாவலி மன்னன்
See Answer:

15 ‘நறுவீ’ என்ற சொல்லில் ‘வீ’ எனக் குறிப்பிடப்படுவது
A. மலர்
B. வெளிச்சம்
C. வீடு
D. வெள்ளை
See Answer:

16 ‘நெல்லொடு நாழி கொண்ட, நறுவீ முல்லை, அரும்பவிழ் அலரி தூஉய், கைத்தொழுது’ என முல்லைப்பாட்டு குறிப்பிடுவது.
A. பழக்க வழக்கம்
B. நம்பிக்கை
C. சடங்கு
D. சம்பிரதாயம்
See Answer:

17 ‘விரிச்சி’ என்பதன் பொருள்.
A. விரித்துக் கூறுதல்
B. நற்சொல்
C. நற்செயல்
D. நம்பிக்கை
See Answer:

18 உறுதுயர் - இலக்கணக்குறிப்பு தருக.
A. உரிச்சொல் தொடர்
B. வேற்றுமைத்தொகை
C. வினைத்தொகை
D. பண்புத்தொகை
See Answer:

19 தடக்கை - இலக்கணக்குறிப்பு தருக.
A. வேற்றுமைத் தொகை
B. பண்புத்தொகை
C. வினைத்தொகை
D. உரிச்சொல் தொடர்
See Answer:

20 ‘கொடுங்கோற் கோவலர்’ எனும் தொடரில் ‘கோவலர்’ என்பது யாரைக் குறிக்கும்.
A. கோவலன்
B. அரசர்
C. பூசாரி
D. இடையர்
See Answer:

6 comments: