Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 2, 2015

அகநானூறு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL


அகநானூறு

  • அகம்+நான்கு+நூறு = அகநானூறு.
  • இதனை ‘அகப்பாட்டு’ எனவும் ‘அகம்’ எனவும் கூறுவர்.
  • இது ஒரு அகத்தினை நூல்.
  • 400 பாடல்களைக் கொண்டநூல்.
  • ஆசிரியப்பாவால் ஆனது.
  • இந்நூல் களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • களிற்றியானை நிரையில் 120(1-200) பாடல்களும், மணிமிடைப் பவளத்தில் 180(121-300) பாடல்களும், நித்திலக்கோவையில் 100(301-400) பாடல்களும் உள்ளன.
  • இது 13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்டது.
  • இதற்கு ‘நெடுந்தொகை அல்லது நெடுந்தொகை நாநூறு’ என்ற வேறுபெயரும் உண்டு.
  • இந்நூலில் 1,3,5,7,9 என வரும் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணைப் பாடல்களாகவும், 2,8 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித்திணைப் பாடல்களாகவும், 4,14,24 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் முல்லைத்திணைப் பாடல்களாகவும், 6,16,26 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்களாகவும், 10,20,30 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் நெய்தல்திணைப் பாடல்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பில் தொகுக்கப்பட்டு சங்க இலக்கிய நூல் இது மட்டுமே.
  • இந்நூல், பாலைத்திணையில் 200 பாடல்களும், குறிஞ்சித் திணையுல் 80 பாடல்களும், முல்லைத் திணையில் 40 பாடல்களும், மருதத் திணையில் 40 பாடல்களும், நெய்தல் திணையில் 40 பாடல்களும் கொண்டுள்ளது.
  • இந்நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திர சன்மர் ஆவார்.
  • தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிர பெருவழுதி.
  • இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
  • இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் வே. ராசகோபால ஐயங்கார்.
  • இந்நூலுக்கு உரை எழுதியவர்கள் நா.மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை.