Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 23, 2015

குரு திசை பொதுப்பலன்கள்.


குரு திசை பொதுப்பலன்கள்.

குரு புக்தி - 2. வ 1.மா -6 நாட்கள்.

சொத்து லாபம், நல்லதிர்ஷ்டம், பிரகாசமான, மகன் பிறப்பு, கௌரவம், அரசு மற்றும் அதிகாரிகளின் மூலமான அனுகூலம். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, நல்லகாரியங்கள் செய்தல், நல்லாரோக்கியம், நம்பிக்கை. வெற்றி, விருப்பங்கள்,புனித பயணங்கள், மத சம்பந்தமான மற்றும் தர்ம ஸ்தாபனங்களுடன் தொடர்பு ஆகியவை ஏற்படும். பாதிப்பு அடைந்த குரு எனில் இதற்கு நேர்மாறான பலன்கள் ஏற்படும்.



சனி புக்தி - 2-வ 6- மா 12 நாட்கள்.

தீய செயல்கள், குடித்தல்,போக்கிரிகளுடன் தொடர்பு, மனக்கவலைகள், திருமணமானவரானால் மகன்கள் மூலமாக சொத்து இழத்தல், வியாபார நஷ்டம், மனைவி அல்லது கூட்டாளியால் தொல்லைகள் ஆகியவை ஏற்படும். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஜாதகருக்கு உயர்வு, மேன்மை, புகழ், சந்தோஷம் மற்றும் செல்வச் சேர்க்கை, சொத்துச் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.

புதன் புக்தி - 2- வ 3 - மா 6- நாட்கள்.

பெண்களால் தொல்லை, சூதாடுதல், குடித்தல்,நோய் ஆகியவை ஏற்படும் என சில முனிவர்கள் அபிப்பிராயப்பட்டாலும், மற்றவர்கள் கடவுளைத் தொழுவதின் மூலமாகவும் புனிதத் தலங்களுக்குச் செல்வதன் மூலமும் பலன்கள் நன்மையாகவே இருக்கும் எனக் கருதுகின்றனர். ஜாதகர் கலை ஆர்வம் மிக்கவராக இருப்பார். குழந்தைப் பிறப்பு, செல்வ சேர்க்கை, சந்தோஷம் ஆகியவை ஏற்படும். உயர்அதிகாரிகளின் அனுகூலம், அரசாள்பவரின் ஆதரவு, வசதி வாய்ப்புகள் பெருகுதல், வணிகம் மற்றும் வியாபாரத்தில் இலாபம் ஆகிய பலன்கள் நடக்கும்.

No comments:

Post a Comment