Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 16, 2016

அவநுதியணி


2. அவநுதியணி
அவநுதியணி என்பது ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிரிதொன்றாக உரைத்தலாகும். இங்ஙனம் உண்மையை மறுத்துப் பிறிதொன்றினை உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.

"சிறப்பினும், பொருளினும், குணத்தினும், உண்மை
மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும்." – (தண்டியலங்காரம் 75)


அவநுதி வகைகள்
   அவநுதியணி மூன்று வகைப்படும்.

1.       சிறப்பு அவநுதியணி (சிறப்பவநுதியணி)
2.       பொருள் அவநுதியணி (பொருளவநுதியணி)
3.       குணம் அவநுதியணி (குணமவநுதியணி)

1. சிறப்பு அவநுதியணி
ஒரு நபரின் அல்லது பொருளின் சிறப்பினை மறைத்து அதற்கு நேர் மாறான ஒன்றை உரைப்பது சிறப்பு அவநுதியணி எனப்படும்.

2. பொருள் அவநுதியணி
ஒரு சொல்லின் அல்லது தொடரின் பொருளை மறைத்து அதற்கு நேர் மாறான ஒன்றை உரைப்பது பொருள் அவநுதியணி எனப்படும்.

3. குணம் அவநுதியணி
பொருட்களின் இயற்கையான குணாதிசயங்களை மறுத்து கவி தன் செய்யுளை வடித்தால் அது குணம் அவநுதியணி என்று கொள்ளலாம்.

சுரையாழ, அம்மி மிதப்ப என்னும் செய்யுள் வரியில் சுரை மிதக்கும், அம்மி ஆளும் என்னும் அவைகளின் குணங்களை மறுத்து இருப்பதனால் இவ்வரி என்று கொள்ளலாம்.

வினைபற்றிய சிலேடை அவநுதியணி

அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லின் இடமாக வரின், அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்