Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 16, 2016

நிரல்நிறை அணி


19. நிரல்நிறை அணி
நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.


.கா.
     அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
     பண்பும் பயனும் அது  --(திருக்குறள், 45)

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.

நிரல்நிறை அணியின் வகைகள்
நிரல்நிறை அணி இரண்டு வகைப்படும்.
1.       நேர் நிரல்நிறை அணி

2.       எதிர் நிரல்நிறை