Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 16, 2016

ஒப்புமைக் கூட்டவணி


8. ஒப்புமைக் கூட்டவணி

ஒப்புமைக் கூட்டவணி அல்லது ஒப்புமைக் கூட்டம் அணி என்பது தான் சொல்ல வந்த கருத்திற்கு ஒப்பாக பல பொருட்களை ஒன்றாக்கிக் கூறுவதாகும். ஒரு நபரின் அல்லது பொருளின் பல சிறப்புகளை ஒன்றாக தொகுத்துரைப்பது இவ்வணியின் தனிச்சிறப்பு.
"கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்(து)
ஒருபொருள் உரைப்ப(து) ஒப்புமைக் கூட்டம்." – (தண்டியலங்காரம் 79)


வகைகள்
ஒப்புமைக் கூட்டவணி இரண்டு வகைகளென பின்வரும் தண்டியலங்காரம் 80-வது பாடல் விளக்குகிறது:

"புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே,"
1.       புகழ் ஒப்புமைக்கூட்டம் அணி
2.       பழிப்பு ஒப்புமைக்கூட்டம் அணி

எடுத்துக்காட்டு
திரிகடுகம் என்னும் நூலில் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று வகை மூலிகைகள் ஒன்றிணைந்து உடல்நலத்தினை சேர்ப்பது போல், ஒவ்வொரு செய்யுளிலும் 3 கருத்துக்களை இணைத்து வைத்து இவ்வணியினை சிறப்பாக கையாண்டுள்ளார் இதன் ஆசிரியர் 'நல்லாதனார்'. எடுத்துக்காட்டாக:

தன்குணம் குன்றாத் தகைமையும், தாஇல்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும், நன்குணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும், இம்மூன்றும்
மேல் முறையாளர் தொழில்." - திரிகடுகம் 2


இதன் பொருளானது: தனது குடியின் குணத்திற்கேற்ப குறையாத ஒழுக்கமும், இனிய குணமுடையோர் ஏவியவற்றைச்செய்து முடிப்பதும், நால்வகை வேதங்களின் வழிநடத்தலும் மேன்மை மிக்கவர் செய்யும் தொழிலாக கருதப்படுகிறது என்று புகழ் ஒப்புமைக்கூட்டம் அணியாக திகழ்கிறது.