Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 13, 2017

பிளஸ் 2: விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டணம் எவ்வளவு


பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:
பகுதி-1 மொழி ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275. மறுகூட்டல் கட்டணம்: பகுதி- 1 மொழி, பகுதி- 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205.

பணம் செலுத்தும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணைபயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.


விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மே 12-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.