Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 13, 2017

காமராஜர் பற்றிய YouTube video பாடல் வரிகள்

காமராஜர் பற்றிய பாடல் வரிகள் Click Download 

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை

பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தைப் பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டுப் படிக்க வைத்தானடா
மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா
ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானடா
இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே
திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா
தனைப் பெற்ற தாயை விடப் பிறந்த நாடு தான் பெரிது என்பானடா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரைத் தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே