Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 11, 2018

பிளஸ் 1, பிளஸ்2 தமிழ், ஆங்கில பாட தேர்வுகளில் மாற்றம்: அரசாணை வெளியீடு




பிளஸ் 1, பிளஸ்2 தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களின் தேர்வு முறையை மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. +1,+2 வகுப்பில் தமிழ், ஆங்கில பாடங்களுக்கு ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும், 2 தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத அனுமதிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பாடங்ளை போல் இனி மொழிப்பாடங்களிலும் ஒரே தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ், ஆங்கிலம் முதல்தாள், இரணடாம் தாள் என தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. இந்த தேர்வு மாற்றம் இந்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசாணையில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு இரண்டு தாள்கள் வீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதால் ஏறத்தாழ பத்து நாட்கள் செலவிடப்படுவதாகவும், மொழிப்பாடம் ஆங்கிலப் பாடத்தில் இரு தாள்களில் இரு தேர்வுகள் எழுதுவதன் காரணமாக தேர்வு நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. +1,+2 பொதுத்தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள 8 தேர்வுகளுக்குப்பதிலாக 6 தேர்வுகளாக குறையும்பொழுது மாணவர்களின் மன அழுத்தம் பெரிதும் குறையும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ்2 தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய தாள்கள் இரு தேர்வுகளாக நடத்தப்படும்போது பாடப்பகுதிகளில் உள்ள எதனையும் நீக்காமல் அனைத்தும் ஒரே வினாத்தாளில் வரும்படி தயாரிக்கலாம் என்றும் இந்த மாற்றம் தொடர்பாக பாடத்திட்ட குழுவிற்கு உயர்மட்ட குழுவின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



GO Click Download