Monday, June 11, 2018

கால்நடை மருத்துவம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் (ஜூன் 11ம் தேதி)

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி




தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின்கீழ்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 7 கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்பு, பிடெக் உணவுத்தொழில்நுட்பம், கோழி உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் என மொத்தம் 400 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் ஜூன் 11ம் தேதி(இன்று) முடிவடைகிறது

. இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன், தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரியில் ஜூன் 18ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர், வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள்/ வெளிநாடு வாழ் இந்தியரின் நிதி பெறுவோர், வெளிநாட்டினர் பிரிவின்கீழ் www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE
Back To Top