Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 15, 2018

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ஜூன் 19 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு





பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 19 -ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

தமிழகத்தில் நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தத்கல் உள்பட) ஜூன் 19 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு, செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள், கண்டிப்பாக மீண்டும் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதுடன், எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறைத் தேர்வு மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும். 




மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.