Search This Blog

Sunday, June 17, 2018

எம்.பி.பி.எஸ்.: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு பதிவு செய்ய நாளை கடைசி நாள்

0 comments



மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வுக்குப் பதிவு செய்ய திங்கள்கிழமை (ஜூன் 18) கடைசி நாளாகும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது.

ஜூன் 13 -ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வுக்கான பதிவு செய்யும் நடைமுறைகள் தொடங்கின. ஜூன்18 -ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். அதன் முடிவுகள் ஜூன் 22 -ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைமுறைகள் ஜூலை 6 -ஆம் தேதி முதல் தொடங்கும்.
கூடுதல் விவரங்களை mcc.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.