Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 26, 2018

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் பட்டப் படிப்புகளுக்கான 2018 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன.



இந்த முடிவுகளை www. results.unom.ac.in, www.ideunom.ac.in, egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மறு மதிப்பீடு: தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 28 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு பாடம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

மறுகூட்டல்: மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், பாடம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் கட்டணம் செலுத்தி ஜூன் 28 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
உடனடித் தேர்வு: 6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு தியரி பேப்பரில் மட்டும் தோல்வியடைந்திருக்கும் இளநிலை பட்ட மாணவர்களும், அதுபோல 4-ஆம் பருவத் தேர்வில் ஒரே ஒரு தியரி பேப்பரில் மட்டும் தோல்வியடைந்திருக்கும் முதுநிலைப் பட்ட மாணவர்களும் ஜூலை 28-ஆம் தேதி நடத்தப்படும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 



இதற்கு ஆன்-லைனில் ஜூன் 28 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது

Popular Feed

Recent Story

Featured News