Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 2, 2018

ஆவின் நிறுவனத்தில் 275 பேருக்கு பேக்டரி அசிஸ்டன்ட் வேலை.


ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஆவின் நிறுவனத்தில் பேக்டரி அசிஸ்டன்ட் வேலைக்கு 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமாக ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

பால் பாக்கெட் விற்பனை மற்றும் பால் உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ‘சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட்’ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் 152 இடங்களும், திருவண்ணாமலைக்கு 35 இடங்களும், நீலகிரிக்கு 35 இடங்களும், ஈரோட்டில் 9 இடங்களும், சேலத்தில் 11 இடங்களும், தஞ்சாவூரில் 33 இடங்களும் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2018 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 



எம்.பி.சி., டி.என்.சி., பி.சி., பி.சி.எம். பிரிவினர் 32 வயதுடையவர்களும், எஸ்.சி.ஏ., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. இணையதளம் வழியே 16-7-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 



விரிவான விவரங்களை www.omcaavinsfarecruitment.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.