Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 30, 2018

ரூ.36900 விலையில் காற்றை சுத்தப்படுத்தும் டைசன் நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர்.!


பிரிட்டனை சேர்ந்த டைசன் நிறுவனம் கடந்த ஆண்டு வீட்டு உபயோக பொருட்கள் மார்க்கெட்டில் இந்தியாவிற்குள் கடந்த ஆண்டு நுழைந்தது என்பது தெரிந்ததே. 



இந்நிறுவனத்தின் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது காற்றை சுத்தப்படுத்தும் ஏர் ஃபியூரிஃபையர் என்ற பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த பொருள் ரூ.43,900 மற்றும் ரு.36900 என்ற விலையில் இந்தியாவில் கிடைக்கின்றது. சுத்தமான காற்றை தரும் சென்சார் கொண்டது.




இந்த ஏர் ஃபியூரிஃபையர் நமக்கு சுத்தமான காற்றை புதிய சென்சார் மூலம் தருவதோடு, நம் வீட்டில் எந்த அளவுக்கு காற்றில் தூய்மையின்மை இருக்கின்றது என்பதையும் கண்டுபிடிக்க உதவுகிறது. 

காற்றில் உள்ள அசுத்தத்தை சுத்தப்படுத்துவதற்கு முன்பாக இந்த ஏர் ஃபியூரிஃபையர் உபகரணத்தில் உள்ள எல்.சி.டி டிஸ்ப்ளே மூலம் அந்த அளவை நமக்கு காண்பித்துவிட்டு அதன் பின்னர் காற்றை சுத்தப்படுத்துவதே இதன் இயங்குதிறன் ஆகும்.360டிகிரி அளவில் நமது வீட்டில் உள்ள சுகாதார காற்றுக்கு உத்தரவாதம் தரும் இந்த ஏர் ஃபியூரிஃபையர் உபகரணம் கார்பன் ஃபில்டர் மூலம் செயல்படுகிறது. 

மேலும் இதில் உள்ள கிளாஸ் பில்டர் ஒன்று காற்றில் மிக நுண்ணிய மாசுக்களை கூட சுத்தம் செய்யும் திறன் கொண்டது.

இதுகுறித்து டைசன் நிறுவனம் கூறும்போது இந்த உபகரணம் மல்டிபிள் காற்று தொழில்நுட்பம் மற்றும் 350-டிகிரி ஆசிலேசன் ப்ராஜெக்ட் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஒரு அறையில் உள்ள ஒவ்வொரு மூலையில் உள்ள காற்றையும் சுத்தப்படுத்துகிறது. பயன்படுத்துகிறது என்று கூறுகிறார்.



வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் வடிவத்திற்காகவே இந்த உபகரணம் தயாரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான காற்று சுத்திகரிப்பாளர்களின் சில உற்பத்தியாளர்கள், 'சுத்தமான காற்று டெலிவரி விகிதம்' என்று அழைக்கப்படும் ஆய்வக சோதனை முறையைப் பயன்படுத்தி அவர்களின் செயல்திறனை அளவிடுகின்றனர். 

இது 11.8m2 (127சதுர அடி) அளவிலான ஒரு சிறிய அறைக்குள் நடத்தப்படுகிறது, கூடுதலான மின்விசிறி சுழற்றுவதுடன், காற்றின் தரத்தை அளவிட ஒரே ஒரு சென்சார் கொண்டது. இதுவொரு சரியான சுற்றுச்சூழலை அளவிடகூடியது அல்ல டைசன் ஹெல்த் அண்ட் பியூட்டி நிறுவனத்தின் துணைத்தலைவர் பால் டாசன் என்பவர் இந்த உபகரணம் குறித்து கூறும்போது, 'இந்த ஏர் ஃபியூரிஃபையர் உண்மையான தொழில்நுட்பத்தின் மூலம் நம்முடைய வீட்டில் உள்ள தூய்மைக்காக உருவாக்கப்பட்டது. 

ஆய்வகங்களில் தகுந்த பரிசோதனைக்கு பின்னரே இது வெளியகியுள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்களோ, அது இந்த உபகரணத்தில் நிச்சயம் கிடைக்கும். நம்முடைய வீட்டை இந்த ஏர் ஃபியூரிஃபையர் மூலம் சுத்தப்படுத்தி ஆரோக்கியத்தை தக்க வைத்து கொள்ளலாம்.

தானாகவே வீட்டில் உள்ள அசுத்தத்தை கண்டுபிடித்து, அதில் உள்ள அசுத்த வாயுக்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தீங்கு நிறைந்த பொருட்களை நீக்கும் திறன் கொண்ட இந்த உபகரணத்தால் உங்கள் வீட்டின் அறை முழுவதுமாக சுத்தமாகும். ஒருவீட்டில் உள்ள முழு பாதுகாப்புக்கு இந்த உபகரணம் உங்களுக்கு உதவியாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.