Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 19, 2018

சங்க இலக்கியத்தில் 99 பூக்கள் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள்:


சங்க இலக்கியத்தில் 99 பூக்கள்

குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள்:

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டு நூல் கபிலரால் எழுதப்பட்டது.
இந்நூலில் 99 வகையான மலர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது .
இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம்.
அந்த மலர்களின் பெயர்கள் :

(1) காந்தள்
(2) ஆம்பல்
(3) அனிச்சம்
(4) குவளை
(5) குறிஞ்சி
(6) வெட்சி
(7) செங்கோடுவேரி
(8) தேமாம்பூ
(9) மணிச்சிகை
(10) உந்தூழ் (பெருமூங்கில்)
(11) கூவிளம் (வில்வம்)
(12) எறுழம்
(13) கள்ளி
(14) கூவிரம்
(15) வடவனம்
(16) வாகை
(17) குடசம் (வெட்பாலை)
(18) எருவை (கோரை)
(19) செருவிளை (காக்கணம், சங்கு)
(20) கருவிளை
(21) பயினி
(22) வாணி (ஓமம்)
(23) குரவம்
(24) பசும்பிடி (இலமுகிழ்)
(25) வகுளம் (மகிழம்)
(26) காயா
(27) ஆவிரை
(28) வேரல் (சிறு மூங்கில்)
(29) சூரல்
(30) பூளை
(31) கன்னி (குன்றி மணி)
(32) குருகிலை (முருங்கிலை)
(33) மருதம்
(34) கோங்கம்
(35) போங்கம்
(36) திலகம்
(37) பாதிரி
(38) செருந்தி
(39) அதிரல் (புனலி)
(40) சண்பகம்
(41) கரந்தை
(42) குளவி (காட்டுமல்லிகை )
(43) கலிமா
(44) தில்லை
(45) பாலை
(46) முல்லை
(47) குல்லை
(48) பிடவம்
(49) மாறோடம்
(50) வாழை
(51) வள்ளி
(52) நெய்தல்
(53) தாழை (தென்னம்பாளை)
(54) தளவம்
(55) தாமரை
(56) ஞாழல்
(57) மொவ்வல்
(58) கொகுடி
(59) சேடல் (பவளமல்லிகை)
(60) செம்மல்
(61) செங்குரலி
(62) கோடல்
(63) கைதை (தாழை)
(64) வழை (சுரபுன்னை)
(65) காஞ்சி
(66) நெய்தல்
(67) பாங்கர்
(68) மரா (கடம்பு)
(69) தணக்கம் (நுணா)
(70) ஈங்கை
(71) இலவம்
(72) கொன்றை
(73) அடும்பு
(74) ஆத்தி
(75) அவரை
(76) பகன்றை
(77) பலாசம்
(78) பிண்டி
(79) வஞ்சி
(80) பித்திகம்
(81) சிந்துவாரம் (நொச்சி)
(82) தும்பை
(83) துழாய் (துளசி)
(84) தோன்றி
(85) நந்தி (நந்தியாவட்டம் )
(86) நறவம்
(87) புன்னாகம்
(88) பாரம் (பருத்தி)
(89) பீரம் (பீர்க்கு)
(90) குருக்கத்தி
(91) ஆரம் (சந்தனம்)
(92) காழ்வை (அகில்)
(93) புன்னை
(94) நரந்தம் (நாரத்தம்)
(95) நாகம்
(96) நள்ளிருள் நாறி (இருவாட்சி)
(97) குருந்து (காட்டு எலுமிச்சை)
(98) வேங்கை
(99) புழகு (மலை எருக்கு)