Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 5, 2018

தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு: நாளை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.


இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:



2018 -19 -ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு ஒற்றைச் சாளரமுறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் நடைபெறவுள்ளது.

கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்தியாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.